« Home | Going beyond photos and emails ... » | Mythri - 5M » | Mythri - 4M » | Mythri - 3M » | Christmas 2009 with Anand » | Ananthi - Madhu Reception » | Ananthi - Madhu Wedding » | Kolli Malai Trip » | Mythri pictures are here! » | In tribute of a humble man's b'day »

Pongal Vazghthu by Dr.S.B.Umapathy

தேதி: 28.12.1956
பொங்கல் வாழ்த்து

கீழை வானில் கதிரோன் எழுந்தான்
ஆழ்கடல் தன்னில் ஆர்த்தெழ செவ்வழலை!
முந்தி ஓடும் முகில்களிற் செந்தீ
நன்னீர் தங்கிய நன்செய் கழனி
ஓங்கி வளர்ந்து உயர்ந்த செங்கழை!
பாங்குடன் விதைத்த பயிரது ஓங்கி
ஒண்மணிச் செந்நெற் கதிரது அரும்பித்
தன்சுமை தாளாத் துயரால் படுக்கும்!
மதுரத் தீங்குரல் இசைக்கும் புள்ளினம்
மதுமலர் தன்னில் மொய்தார் தேனீ!
பைந்தரை யதனில் படிந்த பனித்துளி
கதிரோன் கதிரால் கதிரளி முத்தம்!
எங்கும் செம்மை! எங்கும் இளமை!
தங்கும் எழிலிதே தையின் முதனாட்காலை
அன்புடை நண்ப! அருளுடைத் தோழ!
இன்பம் பொங்கும் இந்நாட் காணாய்!
எங்கும் இன்பம்! எங்கும் உவகை!
இன்பம் அல்லால் இன்னல் எது?
துன்பம் எது? துயர்தான் எது?


பொங்கி வழியும் பொங்கல் காணாய்!
பொங்கல் கூவும் பெற்றி கேளாய்!
புன்னகை பூக்கும் தமிழ்தாய் காணாய்!
இன்பம்! இன்பம்! இன்பந் தானே!
தனிநாடு பெற்றோம் தமிழர் நாமே
'தமிழ்நாடு' என்வதைத் தாவணிக் குரைபோம்!
தளரோம் நாமே சால உழைப்போம்!
வளர்பிறை போல வையத் துயர்வோம்


தனிநாடு பெற்ற தனியின்பத் தோடு
இறற்கை ஈந்த இனிய சூழலில்
 பொங்கற் புதுநாள் பூத்தது என்னே?
தங்கப் புதுவணி தரித்த சிறுவர்
கழையினைக் கடித்துவகை மிக்கே எழுப்பும்
முழங்கங் கேளாய்! முழங்குக நீயும்
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

- Dr.சே.பா.உமாபதி

Labels: , ,

Post a Comment